முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகள் தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எனினும் வழங்குடன் தொடர்புடைய ஒவ்வாருவருக்கும் தலா 50 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா ரூபாய் 10 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் முன்விசாரணைக்காக குறித்த இரண்டு வழக்குகளையும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12 மற்றும் 14 ஆம் திகதிகளில் அழைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை முன்னாள் அமைச்சர் கெஹெலிய மற்றும் அவரது மகன் ரமித் ஆகியோருக்கு எதிராக இன்று மற்றுமொரு குற்றப்பத்திரிகை ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன்போது 50ஆயிரம் ரொக்கப் பிணை மற்றும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல நீதிபதி உத்தரவிட்டுள்ளதோடு, வெளிநாட்டுப் பயணங்களுக்கு தடை விதித்து அவர்களது கை ரேகைகளைப் பெற்று அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு மீண்டும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி அழைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சராக கடமையாற்றிய காலப்பகுதியில் முறைக்கேடாக சொத்துக்களை ஈட்டியமை தொடர்பிலேயே இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
















