பாகிஸ்தானில் நடைபெறும் டி:20 முத்தரப்பு தொடருக்கான தேசிய ஆடவர் அணியில் இடது கை சுழற்பந்து வீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேர்வாளர்கள் இணைத்துள்ளனர்.
அவர் தற்சமயம் 2025 ஆசியாக் கிண்ண ரைசிங் ஸ்டார்ஸ் போட்டியில் இலங்கை ‘ஏ’ அணியின் ஒரு பகுதியாக உள்ளார்.
இந்த நிலையில் முத்தரப்பு தொடருக்காக வியாஸ்காந்த் கட்டாரில் இருந்து நேரடியாக பாகிஸ்தானுக்கு பயணம் செய்வார்.
பாகிஸ்தானுனடான ஒருநாள் தொடரின் போது ஏற்பட்ட தொடை தசைப்பிடிப்பு வலியிலிருந்து வனிந்து ஹசரங்கா இன்னும் முழுமையாக மீளாததால், வியாஸ்காந்த் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.



















