தெஹி பாலேக்குச் சொந்தமான சுமார் 200 மில்லியன் ரூபா பெறுமதியான ஐந்து மீன்பிடிப் படகுகளைக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு பறிமுதல் செய்துள்ளது.
திக்வெல்ல மீன்பிடித் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த ஐந்து படகுகளும் பொறுப்பேற்கப்பட்டதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.














