தென் ஆப்ரிக்காவிடம் டெஸ்ட் தொடரை இழந்த பின்னர், அடுத்து நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான வெற்றிக்கூட்டணியை தேர்ந்தெடுப்பதில் கேப்டன் கே.எல். ராகுலுக்கு சில சவால்கள் காணப்படுகின்றன.
ராஞ்சியில் நாளை தொடங்கும் இத்தொடரின் இலக்கு, சீனியர் வீரர்கள் திரும்பியிருக்கும் நிலையில், வலது கை துடுப்பாட்டக்காரர்கள் நிறைந்திருக்கும் அணிக்கு பலம் சேர்க்கும் வகையில் சரியான கலவையை கட்டமைப்பதாகும்.
குறிப்பாக கே.எல். ராகுல் கீப்பராகச் செயல்பட்டால் இடது கை பேட்டரான ரிஷாப் பன்ட்டை மிடில் ஆர்டரில் சேர்ப்பதால் ஆல்-ரவுண்டர் பற்றாக்குறை ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
பும்ரா மற்றும் சிராஜ் இல்லாத நிலையில்,அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் இடையே ஏற்பட்டுள்ள கடுமையான போட்டி குறித்தும் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.
ரோகித், விராட் கோலி போன்ற அனுபவ வீரர்களின் வருகையால் துடுப்பாட்டம் வலிமையாகக் காணப்பட்டாலும், தரமான பதினொருவரைத் தேர்வு செய்வதே தொடரின் வெற்றிக்கு வழிவகுக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.



















