வெலிமடை, ரேந்தபொல பிரதேசத்தில் ஏற்பட்ட பயங்கரமான மண்சரிவு காரணமாக 5 பேர் காணாமல் போயுள்ளனர்.
நேற்று இரவு 10.15 மணியளவில் இந்த மண்சரிவு இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த இராணுவத்தினர் மீட்புப் பணிகளை முன்னெடுத்ததுடன்
இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மெக்சிகோ மற்றும் ஆர்ஜென்டீனா நாட்டுப் பெண்கள் மூவர் உட்பட சுமார் 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
மண்சரிவிலிருந்து மீட்கப்பட்டவர்கள் தற்போது சமரவீரபுர பள்ளிவாசலில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.














