ரிஃபார்ம் யுகே தலைவர் (Nigel Farage) நைஜல் ஃபாராஜ், சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் பள்ளியில் இருந்தபோது இனவெறி மற்றும் யூத-எதிர்ப்பு கருத்துக்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் தீவிரமாக மறுத்துள்ளார்.
இந்தக் கேள்விகள் தொடர்பாக பிபிசி-யை அவர் கடுமையாகத் தாக்கிப் பேசியதுடன், ஒளிபரப்பாளர்கள் இரட்டைத் தரங்களைக் கடைப்பிடிப்பதாகக் குற்றம் சாட்டினார்.
குறிப்பிட்ட இந்தக் குற்றச்சாட்டுகள் எழுந்த காலகட்டத்தில், பிபிசி ‘தி பிளாக் அண்ட் ஒயிட் மின்ஸ்ட்ரல்ஸ்’ போன்ற பிரபலமான நிகழ்ச்சிகளில் முகத்தில் கருப்புச் சாயம் பூசும் முறையைப் பயன்படுத்தியதைக் குறிப்பிட்டு, அதற்கு மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் ஃபாராஜ் வலியுறுத்தினார்.
இதேவேளை, பிபிசி தனது கேள்வியை அரசியல் உள்நோக்கத்துடன் கையாண்ட விதம் வெறுக்கத்தக்கது என்று அவர் விமர்சித்தார்.
மேலும், தனது முன்னாள் யூத வகுப்புத் தோழர் ஒருவரின் ஆதரவுக் கடிதத்தையும் அவர் வாசித்தார், அதில் அந்தக் கூற்றுகள் தீங்கிழைக்கும் நோக்கமற்ற வெறும் பள்ளிச் சிறுவர்களின் கேலிப் பேச்சு என்றும், இவை பல பத்தாண்டுகளுக்குப் பிறகு அரசியல் ரீதியாக எழுப்பப்பட்டவை என்றும் கூறியிருந்தார்.













