அவுஸ்திரேலிய மாநிலங்களில் சுமார் 40 வீடுகளை அழித்த கட்டுத் தீயை எதிர்த்துப் போராடிய தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் திங்களன்று (08) தெரிவித்தனர்.
நியூ சவுத் வேல்ஸ் நகரமான புலஹ்தேலா அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு 3,500 ஹெக்டேர் (8,650 ஏக்கர்) வனப்பகுதியை நாசமாக்கி, நான்கு வீடுகளை அழித்த காட்டுத்தீயை அணைக்கும் போது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தீயணைப்பு பணியின் போது, 59 வயதான நபர் மீது மரம் விழுந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டதாக கிராமப்புற தீயணைப்பு சேவை ஆணையர் ட்ரெண்ட் கர்டின் தெரிவித்தார்.
டாஸ்மேனியாவின் டால்பின் சாண்ட்ஸில் ஏற்பட்ட காட்டுத்தீயால் 30க்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன அல்லது சேதமடைந்துள்ளன.
அங்கு 19 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. மேலும் 14 வீடுகள் சேதமடைந்துள்ளன.
கொட்டகைகள் மற்றும் மின்சார உள்கட்டமைப்பு உட்பட 120க்கும் மேற்பட்ட சொத்துக்களும் பாதிக்கப்பட்டுள்ளன.













