16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடகங்களைத் தடை செய்த முதல் நாடாக அவுஸ்திரேலியா இன்று (10) மாறியது.
இதன் மூலமாக அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் இப்போது டிக்டோக், எக்ஸ், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், ஸ்னாப்சாட் மற்றும் த்ரெட்ஸ் உள்ளிட்ட முக்கிய சமூக ஊடக சேவைகளைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மில்லியன் கணக்கான சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதுடையவர்கள் தங்கள் சமூக ஊடகக் கணக்குகளுக்கான அணுகலை இழந்தனர்.
சமூக ஊடகங்கள் சிறுவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பில் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில் அவுஸ்திரேலிய அரசாங்கம் இந்த தடையை அமுல்படுத்தியுள்ளது.
புதிய சட்டத்தின் கீழ் சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலை தடுக்கத் தவறும் தளங்களுக்கு 49.5 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் (($33 மில்லியன்) வரை அபராதம் விதிக்கப்படும்.
எனினும் இந்த புதிய சட்டம் முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பேச்சு சுதந்திர ஆதரவாளர்களிடமிருந்து விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
ஆனால் பல பெற்றோர்கள் மற்றும் குழந்தை ஆதரவாளர்களால் வரவேற்கப்பட்டது.














