இலங்கை, இந்தோனேசியா மற்றும் தாய்லாந்தைத் தாக்கிய பேரழிவு தரும் வெள்ளத்திற்கு பதிலளிக்கும் விதமாக, ஐரோப்பிய ஒன்றியம் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு 2.4 மில்லியன் யூரோ அவசர உதவியை வெளியிட்டுள்ளது.
இந்த நிதி மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு அத்தியாவசிய நிவாரணத்தை வழங்க உதவும்.
இலங்கையில் நிவாரண முயற்சிகளை ஆதரிக்க 1.8 மில்லியன் யூரோ ( சுமார் 640 மில்லியன் ரூபா) வரை ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பின் பேரிடர் மீட்பு அவசர நிதியத்தின் மூலம் வழங்கப்படும் 500,000 யூரோ அடங்கும்.
மேலதிகமாக 600,000 யூரோ இந்தோனேசியா (300,000 யூரோ) மற்றும் தாய்லாந்து (300,000 யூரோ) ஆகிய நாடுகளில் பேரிடரால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
நிதி உதவியுடன், ஐரோப்பிய ஒன்றியம் அதன் சிவில் பாதுகாப்பு பொறிமுறையின் மூலம் இந்த நிவாரணப் பொருட்களை அனுப்புகிறது.
ஜெர்மனி 4,600 தங்குமிடப் பொருட்களை வழங்கியுள்ளது, அதே நேரத்தில் பிரான்ஸ் 3,400 க்கும் மேற்பட்ட அவசரகால பொருட்களை அனுப்புகிறது.
மீட்புப் பணிகள் மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பிற்கு உதவுவதற்காக இத்தாலி பொறியியல் நிபுணர்கள் குழுவை அனுப்புகிறது.













