சபுகஸ்கந்த பகுதியில் முன்னாள் சபாநாயகரும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல ஓட்டிச் சென்ற ஜீப் வாகனம் மோதிய விபத்தில் ஆறு மாதக் குழந்தை உட்பட மூவர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சப்புகஸ்கந்த, டெனிமுல்ல பகுதியில் நேற்று மாலை (11) இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
காரில் பயணித்த 25 வயது பெண், அவரது ஆறு மாதக் குழந்தை மற்றும் 55 வயதுடைய பெண் ஆகியோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
குழந்தை மேலதிக சிகிச்சைக்காக லேடி ரிட்ஜ்வே சிறுவர்களுக்கான வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோதலில் ஈடுபட்ட ஜீப்பை ஓட்டிச் சென்ற ரன்வாலாவும் காயமடைந்து சிகிச்சைக்காக ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
விபத்துக்கான காரணம் குறித்து சப்புகஸ்கந்த பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.















