ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் வெள்ளிக்கிழமை (12) 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ஹொக்கைடோவின் சில பகுதிகளுக்கும், அமோரி, இவாட் மற்றும் மியாகி மாகாணங்களின் கடற்கரைகளுக்கும் சுனாமி எச்சரிக்கையைத் தூண்டியது.
இந்த ஆலோசனையின் கீழ் உள்ள பகுதிகளில் 1 மீட்டர் வரை அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் (JMA) எதிர்வு கூறியுள்ளது.
திங்கட்கிழமை பிற்பகுதியில் அதே பகுதியில் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அமோரி மாகாணத்தின் கடற்கரையில் 20 கி.மீ ஆழத்தில் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை முற்பகல் 11.44 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
திங்கட்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பின்னர், வடக்கே ஹொக்கைடோ முதல் டோக்கியோவின் கிழக்கே உள்ள சிபா வரை பரந்த பகுதியில் வசிக்கும் மக்கள், ஒரு வாரத்திற்குள் மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிப்பதால், எச்சரிக்கையாக இருக்குமாறு அரசாங்கம் ஒரு சிறப்பு ஆலோசனையை வெளியிட்டிருந்தது.















