இங்கிலாந்தின் பிரபல பாடகர் (Cliff Richard) கிளிஃப் ரிச்சர்ட்ஸ், தனக்குப் புராஸ்டேட் புற்றுநோய் சிகிச்சையளிக்கப்பட்டதை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் அவரது புற்றுநோய் “தற்போது மறைந்துவிட்டது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தனது சுற்றுப்பயணத்திற்கான காப்பீட்டுப் பரிசோதனையின் போது இந்த நோய் கண்டறியப்பட்டதாகவும், அது மற்ற இடங்களுக்குப் பரவாமல் இருந்தது ஒரு நல்ல அதிர்ஷ்டம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அனுபவத்தின் அடிப்படையில், ஆண்களுக்கான தேசிய பரிசோதனைத் தேவை குறித்து அவர் வலியுறுத்தினார்.
மேலும் ஆண்கள் இந்தப் புற்றுநோயால் இறக்க நேரிடும் என்பதால், தாங்கள் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் செய்தியை அவர், (stage four prostate) ஸ்டேஜ் ஃபோர் புராஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் முன்னாள் செய்தி வாசிப்பாளர் ஒருவருடனான உரையாடலின்போது வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.















