பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள முழு நாடுமே ஒன்றாக தேசிய நடவடிக்கையின் கீழ் நேற்று (15) 981 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த செப்டெம்பர் மாதம் முதல் இந்த விசேட சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இதன்படி மேற்கொள்ளப்பட்ட 987 சுற்றிவளைப்புகளின் போதே இந்த சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது 513 கிராம் ஹெரோயின், 890 கிராம் ஐஸ், 35,349 கஞ்சா செடிகள் உள்ளிட்ட பெருமளவான போதைப்பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

















