முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனால் நியமிக்கப்பட்ட பல தொழில் தூதர்களை டெனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் திரும்ப அழைத்து வருவதாக, நிலைமையை நன்கு அறிந்த வொஷிங்டனின் வெளியுறவுத்துறை அதிகாரி மற்றும் இராஜதந்திரிகள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் “அமெரிக்கா முதலில்” முன்னுரிமைகளுக்கு முழுமையாக ஆதரவளிப்பதாகக் கருதப்படும் இராஜதந்திரிகள் திருப்பி அழைக்கும் திட்டத்தில் இலங்கையும் உள்ளடங்கும்.
கிழக்கு ஆசியா மற்றும் பசுபிக் போன்ற தொலைதூரத் தூதர்களுக்கு ஜனவரி 15 அல்லது ஜனவரி 16 ஆம் திகதிக்குள் பணியமர்த்தப்பட்ட நாடுகளிலிருந்து வெளியேற வேண்டும் என்று தொலைபேசி அழைப்புகள் மூலம் தெரிவிக்கப்பட்டதாக சங்கத்தின் தலைவர் ஜோன் டின்கெல்மேன் குறிப்பிட்டார்.
எனினும், இராஜதந்திரிகளுக்கு திருப்பி அழைப்பதற்கான எந்தக் காரணமும் தெரிவிக்கப்படவில்லை.
பணியாளர் பிரச்சினைகள் சம்பந்தப்பட்ட விடயம் என்பதால் பெயர் வெளியிட அனுமதி வழங்கப்பட்டதால், சுமார் இரண்டு டஜனுக்கும் (குறைந்தது 29) மேற்பட்ட நாடுகளில் உள்ள தூதர்கள் தங்கள் பதவிகளை விட்டு வெளியேறுமாறு கூறப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அதிகாரி கூறினார்.
எத்தனை பேர் திரும்ப அழைக்கப்படுகிறார்கள் என்பது குறித்த உறுதியான தகவல் தன்னிடம் இல்லை என்றும் ஜோன் டின்கெல்மேன் குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தின் கீழ் இராஜதந்திர தரவரிசையில் அண்மைய பெரிய மாற்றமாகும்.
இது குறிப்பாக அசாதாரணமானது, ஏனெனில் இது தொழில் வெளியுறவு சேவையைச் சேர்ந்த தூதர்களை உள்ளடக்கியது.
அதேநேரம், நிர்வாகத்தின் நடவடிக்கைகளை கண்டித்துள்ள டின்கெல்மேன், அது அமெரிக்க இராஜதந்திரத்தின் நிலையைப் பாதிக்கும் என்றும் பரிந்துரைத்தார்.














