ஆழிப்பேரலை அனர்த்தத்தின் காவு கொள்ளப்பட்ட உறவுகளின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்றது.
அந்தவகையில் முல்லைத்தீவு நகர்ப் பகுதியில் அமைந்திருக்கின்ற சுனாமி நினைவாலய வளாகத்தில் இன்று காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகிய நினைவேந்தல் நிகழ்வுகளில் சுனாமிப் பேரலையில் தமத சொந்தங்களை இழந்த பல உறவுகள் கலந்து கொண்டு தமது பிரார்த்தனைகளையும் அஞ்சலிகளையும் செலுத்தினர்.
21 ஆண்டுகள் கடந்த பின்பும் ஆறாத வடுவாக மாறியுள்ள இந்த அனர்த்தால் முல்லைத;தீவில் மாத்திரம் சுமார் 2900 பேருக்கு அதிகமானவர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

















