2025 ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டில் முக்கிய வெடிமருந்து உற்பத்தி நிறுவனங்களை பார்வையிட்ட வட கொரிய ஜனாதிபதி கிம் யொங்-உன், அடுத்த 05 ஆண்டுகளில் நாடு தொடர்ந்து ஏவுகணைகளை உருவாக்கும் என்று வெளிப்படுத்தியதாக அந் நாட்டு அரசு ஊடகம் KCNA இன்று (26) தெரிவித்துள்ளது.
போர் தடுப்பை வலுப்படுத்துவதில் நாட்டின் ஏவுகணை மற்றும் ஷெல் உற்பத்தித் துறை மிக முக்கியமானது என்று கிம் கூறியதாக வடகொரிய செய்திச் சேவை கூறியுள்ளது.
2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் முக்கிய கட்சி மாநாட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ள முக்கிய வெடிமருந்து நிறுவனங்களின் நவீனமயமாக்கலுக்கான வரைவு ஆவணங்களை கிம் அங்கீகரித்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வட கொரியாவிற்கான வளர்ச்சித் திட்டத்தை அமைக்கும்.
வியாழக்கிழமை கிம் தனது மகளுடன் சேர்ந்து 8,700 தொன் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலையும் அதன் நிர்மாணத் தளத்தையும் பார்வையிட்ட ஒருநாள் கழித்து வடகொரியாவின் இந்த அறிக்கை வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
















