மதவாச்சி – தலைமன்னார் இடையிலான ரயில் சேவை அடுத்த மூன்று வாரங்களுக்குள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தையடுத்து ரயில் பாதைகளில் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்ய தற்போது பழுதுபார்ப்பு பணிகள் நடைபெற்று வருவதாக ரயில்வே திணைக்களத்தின் பாதைகள் மற்றும் பராமரிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
புத்தளம் ரயில் பாதையில் சேதமடைந்த இரு பாலங்களிலும் பழுதுபார்க்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த பழுதுபார்ப்பு பணிகள் முடிவடைந்ததும் தற்போது நாத்தண்டியா வரை மட்டுமே இயக்கப்படும் ரயில் சேவைகள் புத்தளம் வரை நீடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
















