இந்த ஆண்டு யாழ் மாவட்டத்திற்கு பொது நிர்வாக உள்நாட்டு அலுவலர்கள் அமைச்சு மற்றும் ஏனைய அமைச்சுக்களால் கிடைக்கப் பெற்ற சுமார் 7869.8 மில்லியன் ரூபாய்களில் சுமார் 6735.8 மில்லியன் ரூபாய்கள் செலவு செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலின் போது தலைமை உரையை ஆற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் இவ் வருடம் நிறைவடைய உள்ள நிலையில் யாழ் மாவட்ட செயலகத்துக்கு பொது நிர்வாக உள்நாட்டல்கள அமைத்து மற்றும் ஏனைய அமைச்சுகள் மூலம் கிடைக்கப்பெற்ற நிதிகள் 15 பிரதேச செயலக நீதியாக உரிய முறையில் செலவு செய்யப்பட்டுள்ளது.
பொது நிர்வாக உள்நாட்ட அலுவலர்கள் அமையத்தினால் யாழ் மாவட்ட செயலகத்துக்கு ஒதுக்கப்பட்ட 2700.9 மில்லியனில் 2625.2 மில்லியன் செலவு செய்யப்பட்டுள்ளது.
ஏனைய அமைச்சுகள் மூலம் 5368.8 மில்லியன் ரூபா கிடைக்கப்பட்டுள்ள நிலையில் 4210.5 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது.
தீவக வீதிகள் வேலைத் திட்டம் நாட்டிலே ஏற்பட்ட இடர் நிலை காரணமாக உரிய காலப் பகுதியில் நிறைவு செய்யப்படாத நிலையில் அதற்கான நிதியை மீளப் பெற்றுக் கொடுப்பதற்கு அமைச்சர் சந்திரசேகரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஆகவே இவ் வருடம் நிறைவடைய இம்மாதம் 31 ஆம் திகதி வரை கால அவகாசம் இருக்கின்ற நிலையில் தற்போது இடம் பெற்று வரும் வேலைகளுக்கான கொடுப்பனவுகள் இம்மாத இறுதி வரை வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.














