மியன்மாரில் ராணுவ ஆட்சி அமுலில் உள்ள நிலையில் 5 ஆண்டுகளின் பின்னர் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஆரம்பமாகியுள்ளது
எவ்வாறாயினும் நாட்டில் 20 சதவீதமானவர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளதாகவும் வாக்களிக்க தகுதிபெற்றிருந்தவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மாத்திரமே இன்று வாக்களித்திருந்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மியான்மரில் 2021 பெப்ரவரி மாதம் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.
மியான்மரில் ஆளும் கட்சியின் தலைவராக இருந்த ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளாக அந்த நாட்டில் தேர்தல் எதுவும் நடைபெறாமல் இருந்த நிலையில், தற்போது தேர்தல் நடைபெற்று வருகிறது.
.தேர்தலை 3 கட்டங்களாக நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதுடன் இரண்டாவது கட்டமாக ஜனவரி 11 ஆம் திகதியும் மூன்றாம் கட்டமாக ஜனவரி 25 ஆம் திகதியிலும் வாக்களிப்பு நடைபெறவுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஜனவரி இறுதிக்குள் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்படவுள்ளது.
இதேவேளை ;.மியான்மரில் உள்நாட்டுப் போர் காரணமாக, 36 லட்சத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்ததாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது
நாட்டில் 20 சதவீதமானவர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளதாகவும் வாக்களிக்க தகுதிபெற்றிருந்தவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மாத்திரமே இன்று வாக்களித்திருந்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


















