போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை விடுவிக்க தலையிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழு குறித்து சிறப்பு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரும் ஒருவரும், நான்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரும் அடங்குவதாக சிங்க பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரிகள் தாங்களாகவே தங்கள் நடவடிக்கைகள் குறித்த தகவல்களை பொலிஸ் சிறப்பு புலனாய்வுப் பிரிவுக்கு வழங்கியதாக அறிக்கை மேலும் கூறுகிறது.
பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் அறிவுறுத்தல்களின் பேரில், அவரது கட்டளையின் கீழ் உள்ள சிறப்பு புலனாய்வுப் பிரிவு ஏற்கனவே இது தொடர்பான முதற்கட்ட விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.
இந்த செயல்முறையின் ஒரு பகுதியாக, சந்தேக நபர்களை முதலில் கைது செய்த அதிகாரிகளிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட உள்ளன.
மேலும் சிரேஷ்ட அதிகாரிகள், அவர்களின் விடுதலையைப் பெறுவதற்கு எவ்வாறு தலையிட்டதாகக் கூறப்படுகிறது என்பது குறித்து கவனம் செலுத்துகிறது.














