இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கிண்ணியா பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிண்ணியாவைச் சேர்ந்த ஒருவர் அளித்த முறைப்பாட்டின் பேரில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.
முறைப்பாட்டாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேகநபர்களைக் கைது செய்துள்ள நிலையில், ஏனைய சந்தேகநபர்களையும் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக இலஞ்சமாக 10,000 ரூபாயைக் கோரி, அதனை வேறொருவர் ஊடாகப் பெற்றுக்கொள்ள முயன்ற போதே குறித்த பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
கிண்ணியா காவல் நிலையத்திற்குள் நேற்று (31) மாலை 5:20 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையக அதிகாரிகளால் இந்த கைது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.














