நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு விசேட சுற்றிவளைப்பின் கீழ், பல்வேறு குற்றங்களுடன் நேரடியாகத் தொடர்புடைய மேலும் 27 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் கைது நடவடிக்கைகள் நேற்று (05) இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது 28,636 பேர் சோதனையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதன்போது பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 548 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 142 பேரும் குடிபோதையில் வாகனம் செலுத்தியமை தொடர்பில் 421 பேரும் அத்துடன், கவனயீனமாக வாகனம் செலுத்தியமைக்காக 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வேறு வகையான 4,585 போக்குவரத்து விதிமீறல்கள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
















