நாடளாவிய ரீதியாக நடைபெற்று வரும் குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் நடவடிக்கைகளில் 600 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, நடத்தப்பட்ட நடவடிக்கைகளில் 597 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர், அவர்களில் 225 பேர் திறந்த பிடியாணையின் கீழ் இருந்தவர்கள் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், குடிபோதையில் வாகனம் ஓட்டிய 460 பேர் கைது செய்யப்பட்டனர், மேலும் 57 பேர் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது














