வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ (Maria Corina Machado) அடுத்த வாரம் வொஷிங்டனுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை (08) குறிப்பிட்டார்.
இந்த விஜயத்தின் போது கொரினா மச்சாடோவுடன் சந்திப்பினை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ட்ரம்ப் குறிப்பிட்டார்.
ஃபாக்ஸ் நியூஸின் நிகழ்ச்சி ஒன்றின் போதான நேர்காணலில் ட்ரம்பிடம் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இந்தனை வெளிப்படுத்தினார்.
வெனிசுலா மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் அதன் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, மச்சாடோவைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளீர்களா என்று ட்ம்பிடம் இதன்போது கேள்வி எழுப்பட்டது.
அதற்கு பதிலளித்த ட்ரம்ப், அவர் (மச்சாடோ) அடுத்த வாரம் எப்போதாவது வருவார் என்பது எனக்குத் தெரியும், அவருக்கு வணக்கம் சொல்ல நான் ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று பதிலளித்தார்.
இந்தச் சந்திப்பு குறித்த மேலதிக விவரங்களை வெள்ளை மாளிகை வெளியிடவில்லை.
கடந்த ஒக்டோபரில் அமைதிக்கான நோபல் பரிசு வென்றதிலிருந்து மச்சாடோவுடன் டொனால்ட் ட்ரம்ப் பேசாத நிலையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
தென் அமெரிக்க நாட்டின் எதிர்கால நிர்வாகம் இன்னும் சந்தேகத்தில் உள்ளது.
மச்சாடோவுடன் இணைந்து பணியாற்றும் யோசனையை வார இறுதியில் ட்ரம்ப் நிராகரித்தார், “அவருக்கு நாட்டிற்குள் ஆதரவு அல்லது மரியாதை இல்லை” என்றும் கூறியமை குறிப்பிடத்தக்கது.

















