சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று (10) திரையரங்குகளில் வௌியானது.
டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, சேத்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தழுவி உருவாகியுள்ள படத்தில் தணிக்கையில் பராசக்தியில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் மாற்றம் செய்யப்பட்டதுடன்
படத்தின் கதையை பொறுத்தவரை, தாய் தந்தை இல்லாத செழியன் சின்னதுரை சகோதரர்கள் பாட்டியின் அரவணைப்பில் வளர்கின்றனர்.
செழியன் இந்தி எதிர்ப்பு பக்கம் செல்லாமல் வேலையில் கவனம் செலுத்துகிறார்.
கல்லூரி மாணவனாக சின்னதுரை வெளியே தெரியாமல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொள்கிறார்.
ஒரு கட்டத்தில் சின்னதுரையின் செயல்பாடுகளை செழியனான சிவகார்த்திகேயன் கண்டுபிடிக்கிறார்.
அவரின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பும் தெரிவிக்கிறார். ஆனால் அதர்வா தன்னுடைய கொள்கையில் தீவிரமாக இருக்கிறார்.
அதற்குபின் என்ன ஆனது? அவரின் கொள்கை நிறைவேறியதா? அதற்கு செழியன் என்ன செய்தார்? உண்மையில் அவர் யார்? ஏன் இந்தி எதிர்ப்பு பக்கம் அவர் செல்லவில்லை? இவர்கள் இருவருக்கும் திருவாக வரும் ரவி மோகனுக்கும் என்ன சம்மந்தம்? அவருக்கு தமிழ் மீது ஏன் அதீத கோபம்? இந்தி எதிர்ப்பால் என்னென்ன நடந்தது என்பதே இந்த பராசக்தி.
படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில் ‘பராசக்தி’ படத்தின் முதல் நாள் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளன.
அதற்கமைய ‘பராசக்தி’ படம் முதல் நாளில் இந்தியாவில் 12.35 கோடி ரூபாய் வசூலித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுவே உலக அளவில் 14.75 கோடி ரூபாய் வரை வசூலித்திருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வௌிவந்த அமரன் மற்றும் மதராஸி ஆகிய படங்களின் முதல் நாள் வசூல் சாதனையை கூட, இந்தப்படத்தால் முறியடிக்க முடியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், தயாரிப்பு நிறுவனம் இதுவரை எவ்வித உத்தியோகப்பூர்வ அறிவிப்புகளையும் வௌியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.















