2025ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வென்ற வெனிசியூலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ தனது பரிசை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வெனிசியூலா ஜனாதிபதி மதுரோ அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டதை ‘வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை’ எனப் பாராட்டிய மச்சாடோ, இந்த வெற்றிக்காக ட்ரம்ப்புடன் நோபல் பரிசைப் பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்கும் எனத் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் இதற்குப் பதிலளித்துள்ள நோபல் கமிட்டி, ‘ஒருமுறை அறிவிக்கப்பட்ட நோபல் பரிசைத் திரும்பப் பெறவோ அல்லது மற்றொருவருடன் பகிர்ந்து கொள்ளவோ சட்டப்படி இடமில்லை’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இதேவேளை நோபல் குழுவின் முடிவுகள் இறுதியானவை மற்றும் நிலையானவை என்றும் அதன் செய்திக்குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
















