இந்திய அரசாங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 18ஆம் திகதி இந்தியாவின் தெலுங்கானா மானில, ஹதரபாத் மற்றும் தமிழ் நாட்டின் ஊட்டியில் நடைபெற உள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை வலுவூட்டும் செயலமர்வில் இலங்கையில் இருந்து நுவரெலியா, பதுளை, மத்தளை, மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலிருந்து 20 உள்ளுராட்சி தேர்தல் மன்ற உப தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பயணிக்கின்றனர். இதில் நோர்வூட் பிரதேச சபையின் சார்பில் கணேஷன் இளையராஜா மற்றும் காமராஜ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த செயலமர்வு இலங்கை தொழிலாளர்கள் காங்கிரஸின் கெளரவ பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் கட்சியின் தவிசாலர் மருதுபாண்டி ராமேஸ்வரன் ஆகியோரின் பரிந்துரையின் கீழ் இந்திய அரசாங்கத்தின் முதலாவது வேலைத் திட்டம் என்பதுகுறிப்பிடத்தக்கது.
இச்செயலமர்வில் இந்தியாவின் உள்ளூர் ஆட்சி முறைமைகள் மற்றும் இலங்கையின் உள்ளூர் ஆட்சி முறைமைகள் தொடர்பான் சட்டத்திட்டங்கள், மற்றும் தலைமத்துவ பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
இந்நிழ்வில் பங்கு கொள்ளும் நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் கணேஷசன் இளையராஜா இதற்கு முன்னர் இந்தியாவின் கல்கத்தாவில் நடைப்பெற்ற இளைஞர் பரிமாற்று செயற்றிட்டத்தில் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.












