யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பொங்கல் நிகழ்வுகள் இன்றைய தினம் மிக சிறப்பாக நடைபெற்றது.
வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் நிகழ்வில் , வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி , வைத்திய நிபுணர்கள் , வைத்தியர்கள் தாதிய உத்தியோகஸ்தர்கள் , கணக்காளர்கள், வைத்தியசாலை நிர்வாக உத்தியோகஸ்தர்கள் , வைத்தியசாலை பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.













