இங்கிலாந்தின் (Thameslink) தேம்ஸ்லிங்க் இரயில்வேயில் தொடர்ச்சியாகப் பயணச்சீட்டு இன்றி பயணித்த சார்லஸ் ப்ரோஹிரி(Charles Brohiri) என்பவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அவர் இதுவரை 112 முறை கட்டணம் செலுத்தாமல் பயணம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, நீதிமன்றத்தில் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளார்.
பலமுறை அபராதம் விதிக்கப்பட்டும், இரயில் நிலையங்களுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டும், அவர் தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதோடு, சுமார் 15,000 பவுண்டுகள் வரை அபராதம் செலுத்தவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் பெப்ரவரி மாதத்தில் அவருக்கு வழங்கப்படவுள்ள இறுதித் தீர்ப்புக்காக இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதவேளை, இந்த வழக்கின் மூலம் முறையற்ற பயணங்களைக் கட்டுப்படுத்த இரயில்வே நிர்வாகம் எடுத்து வரும் கடுமையான நடவடிக்கைகள் வெளிப்படுகின்றன.












