ஐரோப்பிய பங்காளிகள் மீது வரிகளை விதிப்பதில் இருந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைத் தடுக்கும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தவும், வரிகள் தொடரப்பட்டால் பதிலடி நடவடிக்கைகளைத் தயாரிக்கவும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் பரந்த உடன்பாட்டை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பெப்ரவரி 1 முதல் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளான டென்மார்க், சுவீடன், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் பின்லாந்து, பிரித்தானியா மற்றும் நோர்வே ஆகிய நாடுகளுக்கு வரிகளை அதிகரிப்பதாக எச்சரிக்கை விடுத்தார்.
அமெரிக்கா கிரீன்லாந்தை வாங்க அனுமதிக்கும் வரை இந்த வரிகள் அதிகரிக்கும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.
இதேவேளை, எதிர்வரும் வியாழக்கிழமை (22) பிரஸ்ஸல்ஸில் நடைபெறும் அவசர உச்சிமாநாட்டில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் இது தொடர்பான தீர்மானங்களைப் பற்றி விவாதிக்க உள்ளனர்.













