• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
ஐசிசி டி:20 உலகக் கிண்ணத்தை காட்சிப்படுத்தும் சுற்றுப்பயணம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

ஐசிசி டி:20 உலகக் கிண்ணத்தை காட்சிப்படுத்தும் சுற்றுப்பயணம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/01/22
in ஆசிரியர் தெரிவு, கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

2026 ஆம் ஆண்டு இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்தும் ஐசிசி டி:20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் கிண்ணத்தை இந்நாட்டில் காட்சிப்படுத்தும் சுற்றுப்பயணம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

நேற்று (21) முதல் 24 வரை நான்கு நாட்களுக்கு நாட்டின் பல பிரதான நகரங்களில் இது காட்சிப்படுத்தப்படுவதோடு, கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இலங்கை-இங்கிலாந்து ஒருநாள் போட்டியின் போது விளையாட்டு ரசிகர்கள் இந்த தங்கக் கிண்ணத்தை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

அதன் பின்னர், கிணை்ணத்தை கண்டி, தம்புள்ளை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களுக்கு எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளதுடன், அங்கு அந்தப் பகுதிகளில் வசிக்கும் விளையாட்டு ரசிகர்கள் உலகக் கிண்ணத்துடன் நினைவுப் புகைப்படங்களை எடுக்கவும் அதைப் பார்க்கும் வாய்ப்பும் வழங்கப்படும்.  

இந்த நாட்டில் உலகக் கிண்ணப் போட்டிகள் நடத்தப்படுவதற்கு முன்பு அதற்கான ஆர்வத்தையும் பார்வையாளர்களின் கவனத்தையும் ஈர்ப்பதே இந்த சுற்றுப்பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.

ஐசிசி டி:20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளை பெப்ரவரி 07 முதல் மார்ச் 08 வரை இலங்கை மற்றும் இந்தியா இணைந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது

2012 இருபதுக்கு 20 உலகக்கிண்ண போட்டிகளுக்குப் பிறகு இலங்கையில் நடத்தப்படும் மாபெரும் போட்டி, இந்த உலகக்கிண்ணப் போட்டியாகும்.

கிரிக்கெட் உலகக்கிண்ண போட்டிகளுக்கான அட்டவணை  2025  நவம்பர் 25 ஆம் திகதி இந்தியாவில் வெளியிடப்பட்டதுடன், சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானம், பல்லேகலே சர்வதேச மைதானம் மற்றும் கொழும்பில் உள்ள எஸ்.எஸ்.சி. மைதானம் ஆகியவற்றை இலங்கையில் நடத்தப்படும் போட்டிகளுக்கான இடங்களாகத் தேர்ந்தெடுத்தது. 

அதன்படி, 8 போட்டிகள் ஆர். பிரேமதாச மைதானத்திலும், 5 போட்டிகள் எஸ்.எஸ்.சி. மைதானத்திலும், 7 போட்டிகள் பல்லேகலே சர்வதேச மைதானத்திலும் நடைபெறவுள்ளது.

இம்முறை, 20 நாடுகள் போட்டியில் பங்கேற்க உள்ளதுடன், அதில் 20 போட்டிகள் இலங்கையில் நடைபெற உள்ளன. மேலும் பாகிஸ்தான் அணி போட்டியிடவுள்ள அனைத்துப் போட்டிகளும் இலங்கையில் நடைபெறும். அதேபோன்று, பாகிஸ்தான் அணிக்கு அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்புக் கிடைத்தால், அந்த இரண்டு போட்டிகளும் இலங்கையில் நடத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவ்வாறு நடந்தால், இறுதிப் போட்டி கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறுவதோடு, இதன் மூலம் இலங்கையில் நடைபெறும் மொத்த போட்டிகளின் எண்ணிக்கை 22 ஆக அதிகரிக்கும்.

இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் போட்டிகள் நடைபெறுவதோடு, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ், அயர்லாந்து, ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாடுகளின் கிரிக்கட் அணிகள் இதில் அடங்கும். மேலும், அமெரிக்கா, கனடா, இத்தாலி, நெதர்லாந்து, நெமீபியா, நேபாளம், ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளும் இந்த ஆண்டு போட்டிகளில் பங்கேற்க உள்ளன.

2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இலங்கையில் நடைபெறும் இருபதுக்கு 20 உலகக்கிண்ணப் போட்டிகள், நாட்டின் பொருளாதாரம், சுற்றுலாத் துறை, விளையாட்டு மேம்பாடு, சர்வதேச விளம்பரம் மற்றும் நாடு தொடர்பில் சாதகமாக நன்மதிப்பை பெறுவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாகக் கருதலாம்.

குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், வெளிநாட்டு அணிகள், ஊடகக் குழுக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் இலங்கைக்கு வருகை தருவதன் மூலம் நாட்டிற்கு அதிக அளவு அந்நியச் செலாவணி வருமானம் கிடைக்கும். மேலும், இதன் ஊடாக ஹோட்டல்கள் மற்றும் உணவு வர்த்தகங்கள், போக்குவரத்து சேவைகள், தொழில்நுட்ப மற்றும் நிர்வாக சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் குறுகிய மற்றும் நீண்ட கால வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் இந்தப் போட்டிகளை நடத்துவதன் மூலம், இலங்கையை ஒரு சுற்றுலாத் தலமாக உலகம் இனங்காண்பதுடன், அதன் ஊடாக புதிய முதலீடுகளை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

மேலும், வருடத்தின் ஒவ்வொரு மாதமும் இலங்கையை ஒரு விளையாட்டு சுற்றுலா மையமாக அடையாளம் காணுதல் மற்றும் நாட்டின் சர்வதேச பின்னணியை வலுப்படுத்தி, அதன் மூலம் இலங்கையின் மதிப்பை அதிகரிப்பது போன்ற நீண்டகால நன்மைகளையும் இதன் மூலம் பெற்றுத்தரும்.

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் கமகே, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன, விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ். அச்சுதன், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா உட்பட நிறைவேற்றுக் குழு மற்றும் இலங்கை T20 உலகக்கிண்ண அணியின் தலைவர் தசுன் ஷானக்க, பிரதான பயிற்றுவிப்பாளர் சனத் ஜயசூரிய உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

May be an image of wedding

May be an image of text

May be an image of text

Related

Tags: ICC T20World Cupஉலகக் கிண்ணம்ஐசிசி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மத்திய மலைநாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்த புதிய கட்டமைப்பு நிறுவப்படும் – ஜனாதிபதி

Next Post

இன்று இலங்கை வரும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு!

Related Posts

மத்திய மலைநாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்த புதிய கட்டமைப்பு நிறுவப்படும் – ஜனாதிபதி
இலங்கை

மத்திய மலைநாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்த புதிய கட்டமைப்பு நிறுவப்படும் – ஜனாதிபதி

2026-01-22
நாளை முதல் வானிலையில் மாற்றம்!
ஆசிரியர் தெரிவு

நாளை முதல் வானிலையில் மாற்றம்!

2026-01-22
உணவிற்கான பணவீக்கம் இம்மாத இறுதியில் 93.7 சதவீதம் வரை அதிகரிப்பு
இலங்கை

கடந்த டிசம்பர் மாதத்தில் பணவீக்கம் அதிகரிப்பு

2026-01-21
கல்வி மறுசீரமைப்புகளின்போது பல்கலைக்கழக நிபுணர்களைக் கொண்ட பொறிமுறை நிறுவப்படும் – ஜனாதிபதி
இலங்கை

கல்வி மறுசீரமைப்புகளின்போது பல்கலைக்கழக நிபுணர்களைக் கொண்ட பொறிமுறை நிறுவப்படும் – ஜனாதிபதி

2026-01-21
26ஆம் திகதியிலிருந்து நெல்கொள்வனவு ஆரம்பிக்கப்படும் – அமைச்சர் கே.டீ.லால்காந்த
இலங்கை

26ஆம் திகதியிலிருந்து நெல்கொள்வனவு ஆரம்பிக்கப்படும் – அமைச்சர் கே.டீ.லால்காந்த

2026-01-21
5 இலட்சம் ரூபா நிவாரணப் பணிகளிலிருந்து விலகிய கிராம அலுவலர்கள்!
இலங்கை

டித்வா’ புயலினால் உயிரிழந்த 525 பேருக்கு மரணச் சான்றிதழ்கள்!

2026-01-21
Next Post
இன்று இலங்கை வரும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு!

இன்று இலங்கை வரும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
இன்று இலங்கை வரும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு!

இன்று இலங்கை வரும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு!

0
ஐசிசி டி:20 உலகக் கிண்ணத்தை காட்சிப்படுத்தும் சுற்றுப்பயணம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

ஐசிசி டி:20 உலகக் கிண்ணத்தை காட்சிப்படுத்தும் சுற்றுப்பயணம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

0
மத்திய மலைநாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்த புதிய கட்டமைப்பு நிறுவப்படும் – ஜனாதிபதி

மத்திய மலைநாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்த புதிய கட்டமைப்பு நிறுவப்படும் – ஜனாதிபதி

0
நாளை முதல் வானிலையில் மாற்றம்!

நாளை முதல் வானிலையில் மாற்றம்!

0
கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு முன்பாக சட்டமா அதிபருக்கு எதிராக அமைதிப் போராட்டம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.