பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்துள்ள 48 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இதனால் நோயாளர்கள் கடும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், சிகிச்சை சேவைகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
இருப்பினும், சிறுவர் வைத்தியசாலைகள், மகப்பேறு வைத்தியசாலைகள், புற்றுநோய் வைத்தியசாலைகள், சிறுநீரக சிகிச்சை பிரிவுகள், முப்படை வைத்தியசாலைகள் மற்றும் தேசிய மனநல நிறுவனம் ஆகியவற்றில் இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவில்லை.












