டித்வா சூறாவளிக்குப் பின்னர் 173 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
காணாமல் போனவர்களில் அதிகளவானோர் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
அண்மைய தகவலின்படி, கண்டியில் 69 பேர் காணாமல் போயுள்ளனர்.
அத்துடன் அங்கு அதிகபட்சமாக 242 இறப்புகள் பதிவாகியுள்ளன.
கேகாலையில், 38 பேர் காணாமல் போயுள்ளனர், 33 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் 32 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் டித்வா சூறாவளியால் பதுளை மாவட்டத்தில் அதிகபட்சமாக நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி அங்கு, 26,393 குடும்பங்களைச் சேர்ந்த 90,127 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.












