அநுராதபுரத்தில் இராஜாங்கனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்று பிற்பகல் கை, கால்கள் கட்டப்பட்டு தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் இராஜாங்கனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.














