டெல்லி, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே கையெழுத்தான வர்த்தக ஒப்பந்த வாய்ப்பை இந்திய உற்பத்தியாளர்கள் மற்றும் நிறுவனங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே சமீபத்தில் கையெழுத்தான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்த தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார்.
இந்த ஒப்பந்தத்தை ‘அனைத்து ஒப்பந்தங்களின் தாய்’ என்று குறிப்பிட்ட பிரதமர், இது இந்தியத் தொழில் துறையினருக்குக் கிடைத்துள்ள ஒரு மிகப்பெரிய மைல்கல் என்று குறிப்பிட்டார். “ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளிலும் இப்போது இந்தியத் தயாரிப்புகளுக்கான கதவுகள் அகலத் திறக்கப்பட்டுள்ளன. இந்திய உற்பத்தியாளர்கள் இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உலகத் தரத்திலான பொருட்களை உற்பத்தி செய்து, ஐரோப்பியச் சந்தையை இந்தியத் தயாரிப்புகளால் ஆக்கிரமிக்க வேண்டும்.” என்று அவர் இந்தியத் தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.














