மாத்தறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவர் சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தப்பிச் சென்ற கைதி பாணந்துறை – குருப்புமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
குறித்த கைதி சட்டவிரோத மதுபான உற்பத்தி தொடர்பில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த கைதி நேற்று மாலை சிறைச்சாலையில் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டிருந்த போது சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், குறித்த கைதி 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுவிக்கப்படவிருந்ததாக சிறைச்சாலை அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
தப்பிச் சென்ற கைதியை தேடும் பணிகளில் பொலிஸாரால் ஈடுபட்டுள்ளனர்.















