இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், உலக அளவில் அதிக செல்வாக்கு மிக்க விளையாட்டு வீரர்களில் ஒருவருமான
விராட் கோலியின் அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் (@virat.kohli) இன்று திடீரென முடக்கப்பட்டுள்ளது.
சுமார் 274 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களை கொண்ட அவரது பக்கம் காணாமல் போனதால், அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை முதல் விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தைத் தேடிய ரசிகர்களுக்கு, “இந்த பக்கம் கிடைக்கவில்லை” (Profile isn’t available) அல்லது “இணைப்பு முறிந்துவிட்டது” (Link may be broken) என்ற செய்திகளே திரையில் தோன்றின.
விராட் கோலி தானாக முன்வந்து தனது கணக்கைச் செயலிழக்கச் செய்தாரா (Deactivate) அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இது நடந்ததா என்பது குறித்து இன்னும் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
















