இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி:20 போட்டியானது இன்று நடைபெறவுள்ளது.
அதன்படி, இந்த ஆட்டானது இன்று மாலை 07.00 மணிக்கு கண்டி, பல்லேகல கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகும்.
இந்தப் போட்டியுடன் இலங்கையுடனான இங்கிலாந்து அணியின் வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் சுற்றுப் பயணம் நிறைவுக்கு வரவுள்ளது.
இந்த சுற்றுப் பயணத்தில் இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரை 2:1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
அதைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் டி:20 தொடரிலும் இரண்டு வெற்றிகளை பெற்று கிண்ணத்தை தனதாக்கியுள்ளது.
இந்த நிலையில் இன்று நடைபெறும் மூன்றாவது டி:20 போட்டியில் இலங்கை அணி ஆறுதல் வெற்றியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
அதேநேரம் இங்கிலாந்து அணி வெற்றிப் பயணத்தை தொடர்ந்து டி:20 உலகக் கிண்ணத்தில் காலடி எடுத்து வைக்க எதிர்பார்த்துள்ளது.















