இடது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன 2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்தின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இது தொடர்பான முறையான அறிவிப்பினை ஸ்ரீலங்கா கிரிக்கெட் இன்னும் வெளியிடவில்லை.
இதனால் இலங்கை அணி சுப்பர் எட்டு சுற்றுக்கு முன்னதாக மாற்று வீரரை தேடுவதற்கான கட்டாயத்தில் உள்ளது.
இடது கை வேகப்பந்து வீச்சாளர் தில்ஷான் மதுஷங்க அவருக்குப் பதிலான மாற்று வீரர் பரிசீலனையில் உள்ளார்.
அதேநேரத்தில் பினுரா பெர்னாண்டோ மற்றும் நுவான் துஷார ஆகியோரும் பரிசீலனையில் உள்ளனர்.
இதனிடையே இலங்கை அணி, வனிந்து ஹசரங்காவை மீண்டும் களமிறக்குவதற்கான சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து வருகிறது.
அவர் தனது தொடை தசை காயத்திலிருந்து முழுமையாக குணமடையவில்லை என்றாலும், போட்டியின் பிற்பகுதியில் அவர் உடற்தகுதியை மீண்டும் பெற முடியுமா என்பது குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன.
















