குயின்ஸ்லாந்து மாநிலத்திற்கான இலங்கையின் புதிய கௌரவ தூதுவராக நளின் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமனக் கடிதத்தை அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் யசோஜா குணசேகர இன்று( 19) கான்பெராவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
இந்த நியமனம் குறித்து கருத்து தெரிவித்த உயர்ஸ்தானிகர் யசோஜா குணசேகர தெரிவிக்கையில்,
குயின்ஸ்லாந்து மாநிலத்துடன் இலங்கையின் ஈடுபாட்டை அதிகரிப்பதோடு, நளின் பெரேராவின் வணிகத் தொடர்புகள் மூலம் இலங்கையின் வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா வாய்ப்புகளை மேம்படுத்துதல் முக்கிய நோக்கமாகும் எனக் குறிப்பிட்டார்
இதேவேளை, தற்போது குயின்ஸ்லாந்தில் சுமார் 20,000 இலங்கை சமூகத்தினர் வசித்து வருகின்றனர். கான்பெராவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துடன் இணைந்து, இவர்களுக்கான தூதரக சேவைகளை எளிதாக்க எதிர்பார்ப்பதாக நளின் பெரேரா தெரிவித்துள்ளார்.















