ரஞ்சியில் போக்குவரத்து விதி மீறலுக்காக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனிக்கு ₹ 1000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நகர போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பு அவரது வீட்டின் அருகே வேக விதிமீறலைப் பதிவு செய்ததை அடுத்து, மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 183 இன் கீழ் டிஜிட்டல் (e-challan) முறையில் இந்த அபராதம் விதிக்கப்பட்டது.
இந்தக் குற்றம் சிறியதாக இருந்தாலும், முன்னாள் இந்திய அணியின் தலைவர் சம்பந்தப்பட்ட விடயம் அவரது ரசிகர்கள் மத்தியிலும் சமூக ஊடகங்களிலும் விரைவாக கவனத்தை ஈர்த்தது.
ராஞ்சியில் ஒரு குடியிருப்பு நிலத்தை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக ஜார்க்கண்ட் மாநில வீட்டுவசதி வாரியம் தோனிக்கு அழைப்பாணை அனுப்பியபோது அவர் மற்றொரு சட்டச் சிக்கலை எதிர்கொண்ட சில நாட்களுக்குப் பின்னர் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குடியிருப்பு நோக்கங்களுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்ட இந்த சொத்து, வணிக நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலம் ராஞ்சியில் உள்ள ஹர்மு சாலையில் அமைந்துள்ளது என்றும், தோனி முன்பு ரிங் ரோட்டில் உள்ள தனது தற்போதைய இல்லத்திற்கு மாறுவதற்கு முன்பு அங்கு வசித்து வந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
2026 ஐபிஎல் நெருங்கி வருவதால், தோனி ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸுடன் பயிற்சிப் பணிகளுக்குத் திரும்பியுள்ளார்.
புதிய சீசனுக்கு அணி தயாராகி வருவதால் அவர் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

















