இங்கிலாந்து – அயர்லாந்து உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, இங்கிலாந்தில் 900 மில்லியன் பவுண்ட்ஸுக்கும் அதிகமான புதிய ஐரிஷ் முதலீடு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
937 மில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான இந்த முதலிட்டுத் திட்டம் சுமார் 850 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று இங்கிலாந்துப் பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் (Sir Keir Starmer) கூறியுள்ளார்.
இதில் வடக்கு அயர்லாந்துக்கும் அயர்லாந்துக்கும் இடையிலான எரிசக்தி இணைப்புத் திட்டமும் அடங்கும்.
இது எல்லையின் இருபுறமும் மின்சாரச் செலவுகளைக் குறைக்க உதவும் என்று இங்கிலாந்து அரசாங்கம் கூறியுள்ளது.
வேல்ஸ் மற்றும் அயர்லாந்தை இணைக்கும் ஒரு தனி எரிசக்தி இணைப்புத் திட்டம் 570,000 வீடுகளுக்கு போதுமான மின்சாரத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், லண்டன், டான்காஸ்டர், சவுத் வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்து ஆகியவை இந்த முதலீட்டுத் திட்டத்தினால் பயனடையவுள்ளதுடன், இங்கிலாந்து முழுவதும் உள்ள சமூகங்களிடையே இது கணிசமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் கூறப்படுகிறது.














