பாத்ஃபைண்டர் அறக்கட்டளையின் (Pathfinder Foundation’s) நிறுவனர் மிலிந்த மொரகொட, இலங்கைக்கான சீனத் தூதர் மேதகு கி சென்ஹாங்குடன், அறக்கட்டளைக்கும் சீன சிந்தனைக் குழுக்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதித்தார்.
அறக்கட்டளையின் அண்மைய செயல்பாடுகள் குறித்து தூதருக்கு மொரகொட விளக்கமளித்ததோடு, 2026 மார்ச் 5 அன்று தொடங்கப்பட்ட தேசியப் பாதுகாப்பு உத்திக்கான பாத்ஃபைண்டர் அறக்கட்டளையின் முன்மொழிவையும் பகிர்ந்துகொண்டார்.
சீன நிறுவனங்களுடன் இணைந்து பாத்ஃபைண்டர் அறக்கட்டளை பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருவதாக மொரகொட இதன்போது தெரிவித்தார்.
இவற்றில் முதலாவதாக, மே மாதத்தின் இரண்டாம் வாரத்தில் நடைபெறவுள்ள 2026 சீனா-இலங்கை கடல்சார் ஒத்துழைப்பு உரையாடலும் அடங்கும்.
பாத்ஃபைண்டர் அறக்கட்டளையின் சீனா-இலங்கை ஒத்துழைப்பு ஆய்வுகள் மையத்தின் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக, செங்டுவில் உள்ள சிச்சுவான் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வுகளுக்கான சீன மையத்துடன் (CCSAS) இந்த உரையாடலுக்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
சீனத் தூதரகத்தின் மூன்றாம் செயலாளர் ஜின் என்சே மற்றும் பாத்ஃபைண்டர் அறக்கட்டளையின் தலைவர் பெர்னார்ட் குணிதிலக ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.













