மகர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் உடலுக்கு, இன்று மாலை (03) ராகம மருத்துவமனை பிரேத அறையில் சிறப்பு தடயவியல் குழுவினரால் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.
இதன்போது , அதிகப்படியான இரத்தப்போக்கே மரணத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது .
பிரேத பரிசோதனையைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட கைதியின் உடல் இன்று மாலை (03) வத்தளை பகுதியில் உள்ள அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.














