பிரித்தானியாவின் முதலாவது ‘சூப்பர் பல்கலைக்கழகம்’ (Super-University) எனக் கருதப்படும் ‘London and South East University Group’ எதிர்வரும் செப்டம்பர் 7 ஆம் திகதி உத்தியோகபூர்வமாகத் தொடங்கப்படவுள்ளது.
கிரீன்விச் மற்றும் கென்ட் (Greenwich – Kent) ஆகிய இரு பல்கலைக்கழகங்களின் இணைப்பின் மூலம் உருவாகும் இந்தக் கூட்டமைப்பில், லண்டன், மெட்வே (Medway) மற்றும் கென்ட் முழுவதும் உள்ள நான்கு வளாகங்களில் 50,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலவுள்ளதுடன், இது பிரித்தானியாவின் மூன்றாவது மிகப்பெரிய உயர்கல்வி நிறுவனமாக மாறவுள்ளது.
பிரித்தானிய உயர்கல்வித் துறை சந்தித்து வரும் நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இணைப்பு இடம்பெறுகின்ற போதிலும், இரு பல்கலைக்கழகங்களும் தங்களுடைய தனித்துவமான கல்விப் பெயர்களையும் அடையாளங்களையும் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
















