இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் நிலவும் தளம்பல் நிலை (low-level atmospheric disturbance) தொடர்ந்து காணப்படுகிறது.
இதன் தாக்கத்தினால், மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மேகமூட்டமான வானிலையுடன் கூடிய மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படும் தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
காற்று:
காற்று தென்மேற்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகம் மணிக்கு 25 முதல் 35 கி.மீ வரை இருக்கும்.
கொழும்பு முதல் காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளில், காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.
கடல் நிலை:
கொழும்பு முதல் காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்பகுதிகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடுவதுடன், கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படலாம்.














