ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு விமானங்களை கொள்முதல் செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பான பணமோசடி வழக்கில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஒரு சந்தேகநபரான பெயரிடப்பட்டுள்ளார்.
சடடமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், குற்றப் புலனாய்வுத் துறை (CID) நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், நடைபெற்று வரும் வழக்கில் நாமல் ராஜபக்ஷ ஒரு சந்தேகநபரான பெயரிடப்பட்டுள்ளதாக நீதிவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
ஏர்பஸ் விமான கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பான இலஞ்ச முறைப்பாட்டில், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் (CIABOC) அண்மையில் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ, தற்போது செப்டம்பர் 18 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் மற்றும் இந்த ஒப்பந்தம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட கூட்டு விசாரணை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டது.
இவ்வழக்கு தொடர்பாக நமல் ராஜபக்சவை செப்டம்பர் 16 அன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் பாசன் அமரசேன இன்று உத்தரவிட்டார்.
















