நாடு முழுவதும் போதைப்பொருள் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கை பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்ட முழு நாடும் என்றாக எனும் நடவடிக்கையின் கீழ் நேற்று மொத்தம் 740 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கடந்த ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி தொடங்கப்பட்ட இந்த நடவடிக்கையானது, நாடு முழுவதும் போதைப்பொருள் விநியோகத்தைத் தடுத்தல், போதைப்பொருட்களுக்கான தேவையைக் குறைத்தல், சட்ட அமுலாக்க நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல், போதைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்துதல் மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதற்கிணங்க, பொலிஸாரால் நேற்று சந்தேக நபர்களைக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், இந்த நடவடிக்கையின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மீது சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளும் தொடங்கப்பட்டுள்ளன.
மேலும், மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக எட்டு சந்தேக நபர்களுக்கு எதிராகத் தடுப்புக் காவல் உத்தரவுகளைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், வேறு நான்கு சந்தேக நபர்கள் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.








