இலங்கை கிரிக்கட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் வனிந்து ஹசரங்க உபாதை காரணமாக தொடரை கைவிட்டு நாட்டிற்கு திரும்பவுள்ளதாக கிரிக்கட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரது கழுத்து மற்றும் முதுகுப் பகுதியில் ஏற்ப்பட்டுள்ள தசைபிடிப்பே இதற்கு காரணமென தெரியவந்துள்ளது. இந்த பிரச்சினை காரணமாக அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார்
இந்நிலையில் வனிந்துவிற்கு பதிலாக சச்சிந்து கொலம்பபே அணியில் இணையவுள்ளதுடன் இது அவரது அறிமுக சர்வதேச ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.














