சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 1,300 வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் 37 வயதான சீன நாட்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழு இந்த சோதனையை நடத்தியது.
இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.













